தேவையில்லாதவற்றைப் பெறத் திட்டமிடுவோம்
அப்பொழுது தான் தேவையானவை கிடைக்காது
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் முயற்சியின் காரணமாகத் தமிழகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.48 கோடி கூடுதலாக மய்ய அரசு அளித்துள்ளது,என்று 19.03.2008 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சரி! இந்தப் பணம் எதற்குப் பயன்படப் போகிறது தெரியுமா?
பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டவும்,பிற கட்டங்களைக் கட்டவும்,பிற கட்ட்டங்களைக் கட்டவும் தான்.பெருந்தலைவர் காமராசர் கிராமப்புறக் கல்வி
திட்டத்தைக் கொண்டுவந்தபோது அதிகாரிகள் அனைவரும்.கட்டடம் கட்டுவதற்கும்,தளவாடங்கள் வாங்குவதற்கும் ஆகும் செலவைக்காட்டியே
பயமுறுத்தினர்.கல்விமேதை நெ.து.சுந்தரவடிவேலு தான் கட்டடங்களிலும்,
தளவாடங்களிலும் பணத்தை விரயம் செய்யத் தேவையில்லை என்றும், ஆசிரியர்களை நியமிப்பதற்கு, அடிப்படை வசதிகளுக்குமட்டும் செலவழித்தால்
போதும் என்றும் ஆலோசனை கூறி,திட்டம் வெற்றிபெறவழி வகுத்தார்.நெ.து.
சுந்தரவடிவேலுவின் ஆலோசனையைக் கேட்டபெருந்தலைவர் உயர்சாதிக் கும்பலைச்சேர்ந்தவர்களுக்கு உண்மையில் திறமை இல்லை என்பதையும்,
அவர்களுக்கு ஏமாற்றும் திறமைதான் உள்ளது என்பதையும் கண்டார்.முரண்டு
பிடித்த அவர்களைத் தமிழகத்தை விட்டேவிரட்டினார்.ஆனால் இப்பொழுது நமது பிற்பட்ட மக்களின் தலைவர்கள் உயர் சாதிக்கும்பலின் சூழ்ச்சிக்குப் பலியாகி,சுற்றுச்சுவர்கட்டுவதற்குப்பணத்தைப் பெற்றுவந்திருக்கின்றனர்.
தமிழகத்தின் பல கிராமங்களில் பள்ளிகள் இல்லை.பள்ளிகள் இருந்தால் ஆசிரியர்கள் இல்லை.ஆசிரியர்கள் இருந்தாலும்போதுமான எண்ணிகையில்
இல்லை.இந்தச்சூழ்நிலையில் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதற்கு வழி
வகை தேடாமல் சுற்றுச்சுவர் கட்டுவதற்குத் திட்டமிடுவது வேதனைக்குரியது.
கல்வித்துறையைப் பொருத்தமட்டில்இப்பொழுதைய அவசரத்தேவை, போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதே.அதைவிட்டு,சுற்றுச்
சுவர்கட்ட முன்னுரிமை அளிப்பது எந்த வகையைச் சேர்ந்த்து?தேவையில்லா
தவைதான் வேண்டும்;தேவையானவை கிடைக்கக் கூடாது என்று தெரிந்தே
திட்டமிட்டால்,அதற்கு மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்....
நன்றி..இராமியா மக்கள் நெஞ்சம்
Thursday, May 15, 2008
Wednesday, May 14, 2008
சிந்தனையாளன்
தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தபட்ட
மக்களின் உரிமைகளுக்காக
ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்...
சிந்தனையாளன்
படியுங்கள்
மக்களின் உரிமைகளுக்காக
ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்...
சிந்தனையாளன்
படியுங்கள்
Subscribe to:
Posts (Atom)
